உச்சநீதிமன்ற தீர்ப்பில் அந்த ஒரு வாசகம் | அடுத்த கட்டத்திற்கு செல்லும் ஓபிஎஸ் தரப்பு! இபிஎஸ்.க்கு சிக்கலா? அடுத்து என்ன நடக்கும்?! - Seithipunal
Seithipunal


அதிமுக பொது குழு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய அந்த தீர்ப்பில், "பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்த சிவில் மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம். தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் சிவில் வழக்கை பாதிக்காது" என்று தெரிவிக்கப்பட்டு இருப்பது ஓபிஎஸ் தரப்புக்கு கிடைத்த கடைசி வாய்ப்பாக அமைந்துள்ளது.

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தின் உச்சமாக, ஜூலை 11 பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். 

மேலும், ஓபிஎஸ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவையும், அதன் முடிவை எதிர்த்தும், ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், பொதுக்குழு செல்லாது, இரட்டைத் தலைமையே தொடரும் என்று, உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் இபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த  தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பின்படி,

* ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும்
* அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி 
* பொதுக்குழு தீர்மானங்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவில்லை 
* பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தாக்கல் செய்த சிவில் மனுக்களை தொடர்ந்து விசாரிக்கலாம்
* தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் சிவில் வழக்கை பாதிக்காது, என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிக்கின்றது.

தீர்ப்புக்கு பின் பேட்டியளித்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், "உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு முழுமையான வெற்றியல்ல. எண்களின் இந்த சட்டப்போராட்டம் சிவில் வழக்கு நீடிக்கும்.

இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமி உரிமை கோர முடியாது. ஏற்கனவே சிவில் நீதிமன்றத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ஆக, தற்போது சிவில் நீதிமன்றத்தில் பொதுக்குழு தீர்மானங்கள் கட்சியின் விதிகளுக்கு புறம்பானது என்று, ஓபிஎஸ் தரப்பு சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க உள்ளது உறுதியாகியுள்ளது.

முன்னதாக சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொதுக்குழு நீக்கிய வழக்கும் சிவில் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், ஓபிஎஸ் வழக்கும் அதனோடு சேர போகிறது. 

எது எப்படி ஆனாலும், தற்போதைக்கு அதிமுகவின் ஒற்றை தலைமை எடப்பாடி பழனிச்சாமி தான் என்பது உறுதியாகியுள்ளது. காரணம் நாளுக்கு நாள் ஓபிஎஸ் தரப்பு பக்கம் ஆதரவு குறைந்து வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பின், அதிமுகவில் அதவாது எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் இணையும் படலம் அதிகரிக்கும். 

சொல்லப்போனால் இந்த ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி அல்லது, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தால், அமமுகவின் நிர்வாகிகள் கூட அதிமுகவில் இணையும் நிகழ்வுகள் நடக்கலாம் என்கிறார்கள் அரசுயல் விமர்சகர்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK head EPS SC order OPS next move what


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->