வலைத்தளங்களில் வைரலாகும் வைரமுத்துவின் ட்விட்டர் பதிவு.! - Seithipunal
Seithipunal


கடந்த 1980-ம் ஆண்டு வெளிவந்த பாரதிராஜாவின் 'நிழல்கள்' படத்தின் மூலமாக திரை உலகில் நுழைந்தவர் வைரமுத்து. அந்தப் படத்தில்  'இது ஒரு பொன் மாலைப் பொழுது...' என்ற பாடல் மூலம் தனது வைர வரிகளால் தமிழை பட்டை தீட்டத் தொடங்கினார். 

சுமார் 43 ஆண்டுகளுக்கும் மேலாக கவிதையில் பட்டையை கிளப்பி வரும் வைரமுத்து, ஏழு முறை தேசிய விருது பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

அதாவது, 'பழித்தாரும் வாழ்க, என்னைப் பகைத்தாரும் வாழ்க. மன்றில் இழித்தாரும் வாழ்க, வாழ்வில் இல்லாத பொய்மை கூட்டிச் சுழித்தாரும் வாழ்க. என்னைச் சுற்றிய வெற்றி வாய்ப்பைக் கழித்தாரும் வாழ்க. நானோ காலம்போல் கடந்து செல்வேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vairamuththu twitter post viral


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->