#சற்றுமுன் | எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் பரபரப்பு! அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் வழக்கில் தீர்ப்பு!
AIADMK Case Judgement EPS Home some info 2023
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை கடந்த 22 ஆம் தேதி நீதிபதி குமரேஷ்பாபு சீசரனை செய்தார். முதலில், ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர் ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அன்றைய தினமே அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில். வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 24 ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யத நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர், மூத்த நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் இறங்கியுள்ளார்.
மேலும் அவரின் இல்லத்தின்முன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் குவிந்து உள்ளனர். தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
English Summary
AIADMK Case Judgement EPS Home some info 2023