விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்த வெளியான அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக சுமார் 13 புதிய ரக பயிர்களை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், 

இந்த வருடத்துக்கான நெல் கோ 53, நெல் ஏடீடி 54, கரும்பு சிஓசி 13339, பருத்தி கோ 17, உளுந்து வம்பன் 11, சோளம் கோ 32, திணை ஏ.டி.எல் 1, வாழை கோ 2, தக்காளி கோ 4, சிறிய வெங்காயம் கோ 6, மரவள்ளி ஒய்.டி.பி 2, கொடுக்காப்புளி பி.கே.எம் 2 மற்றும் மணத்தக்காளி 1 அறிமுகம் செய்யபட்டுள்ளது. 

நெல் பிரிவில் இரண்டு ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், கோ 53 ரக நெல் வறட்சி பகுதியான இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்திற்கு ஏற்றவாறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வகையான ரக நெல்கள் வறட்சியை தாங்கி நல்ல மகசூலை தரும் என்றும், பிற நெல் நகரமான ஏ.டி.டி 54 மத்திய கால ராகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் அதிக மகசூலை தரும். 

இதனைப்போன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள கோ 2 பூவன் வாழ ரகம் ஏக்கருக்கு 32 டன் மகசூலை தரும் என்றும், வாழையை தாக்கும் நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ள எதிர்ப்பு திறன் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

agriculture department introduced new type of seeds


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->