தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்.? வெளியாக போகும் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நேற்று புதிதாக 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,46,000 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 294 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 78 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் 200-க்கு கீழே பதிவான தொற்று நேற்று 294 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 46 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்துள்ளது. ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னை - 32, மதுரை - 4, செங்கல்பட்டு - 3, தி.மலை - 2, சேலம், திருவாரூர், குமரியில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள 2 நபர்கள் கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒமைக்ரான் பரவல் காரணமாக கேரளா, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் படலாம் என கூறப்படுகிறது. 

இதற்கிடையே ஒமைக்ரான் பாதிப்பு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகின்ற 31ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

again lockdown for tamilnadu


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->