தமிழகத்தில் அதிகாலை பெண்கள் பால் வாங்க சென்றால் பாதுகாப்பு இல்லை! திமுக அமைச்சரின் சர்ச்சை பேச்சு - அதிமுக விமர்சனம்!
ADMK vs DMK Minister Rajakannappan speech
அதிமுக ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அதிகாலை பெண்கள் பால் வாங்க சென்றால் Culprits வருகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்று கூறியிருப்பது
எதிர்க்கட்சி அல்ல,
கூட்டணி கட்சி கூட அல்ல,
ஆளும் திமுகவின் அமைச்சர் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன்!
தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கின் சீர்கெட்ட நிலையை ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சரே வெட்டவெளிச்சமாக காட்டிவிட்டார்.
இப்போது என்ன Template பதில் சொல்ல போறீங்க முக ஸ்டாலின்? " ஆக.. குற்றவாளிகள் கைது" "இரும்புக்கரம்" "சர்வாதிகாரி" .... இதானே?
"நள்ளிரவில் பெண்கள் நடமாடும் நாள் தான் உண்மையான சுதந்திர இந்தியா" என்கிறோம். ஆனால், இங்கிருக்கும் ஸ்டாலின் மாடல் ஆட்சியிலோ பெண்கள் அதிகாலை கூட பாதுகாப்பாக இல்லை. ஒவ்வொரு நாளும் அரங்கேறும் கொடூரக் கொலைகளை இதற்கு சாட்சி!
(பி.கு. : அதிகாலை பால் பெரும்பாலும் வீடுகளுக்கே டெலிவரி செய்யப்படுகிறது என்பது கூட தெரியாதவர் தான் இன்றைய பால்வளத்துறை அமைச்சர்!) என்று தெரிவித்துள்ளது.
English Summary
ADMK vs DMK Minister Rajakannappan speech