எந்த முயற்சியும், சலசலப்பும் எடப்பாடியாரின் மகத்துவத்தை குன்ற முடியாது!!! -ஆர்.பி. உதயகுமார் உறுதி
No effort or fuss can diminish greatness Edappadiyar RP Udayakumar affirms
இன்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்ததாவது,"எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் அம்மா தனது அயராது உழைப்பால் அ.தி.மு.க.வை இந்தியாவில் மூன்றாம் பெரிய இயக்கமாக மாற்றினார்.
எடப்பாடியார் இருபெரும் தலைவர்களின் செல்வாக்கில், 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்ற மாற்றத்தை தொடங்கி, தமிழ்நாட்டை ஒருங்கிணைத்து எழுச்சி பயணத்தை நடத்தி வருகிறார்.ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியை ஒழித்து, மக்களாட்சியை மீட்டெடுக்க எடப்பாடியார் களத்தில் நேரடியாக போராடுகிறார்.

150 தொகுதிகளில் 65 லட்சம் மக்களை சந்தித்து புதிய சரித்திரம் படைத்துள்ளார்.எடப்பாடியார் செல்லும் இடங்களில் மக்கள் ‘தெய்வம் வந்தார்’ போல வரவேற்கிறார்கள்; இதனால் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் தூக்கம் தொலைந்துவிடுகிறது. எந்த முயற்சியும், சலசலப்பும் எடப்பாடியாரின் மகத்துவத்தை குன்ற முடியாது.
2026 சட்டமன்றத் தேர்தலில், தொண்டர்கள் மன உறுதியோடு, விசுவாசத்தோடு எடப்பாடியாரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். பதவி சுகம், அதிகாரம் விரும்பும் சிலர் முகத்திரையை கிழித்து எறியப்பட வேண்டும்.
மீண்டும் 2026-ல் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலருவதை உறுதிப்படுத்த நாமும் உறுதியாக இருக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இவரது பேச்சால் தற்போது அரசியல் வட்டரத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
No effort or fuss can diminish greatness Edappadiyar RP Udayakumar affirms