சாத்தான் வேதம் ஓதுவது போல எடப்பாடி பாஜகவை பற்றி பேசுகிறார்...! - டிடிவி தினகரன் தாக்கு
Edappadi talking about BJP like Satan reciting Vedas TTV Dhinakaran attacks
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க. ஆட்சியை பா.ஜ.க. காப்பாற்றியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததற்கு, பதிலளித்த டி.டி.வி. தினகரன், “அந்த ஆட்சியை காப்பாற்றியது பா.ஜ.க. அல்ல… 122 எம்.எல்.ஏ.க்கள்தான். எடப்பாடியின் பேச்சு சாத்தான் வேதம் ஓதுவது போல உள்ளது” என்று கடுமையாக தாக்கினார்.
மேலும் அவர் இதுகுறித்து தெரிவித்ததாவது,"கூவத்தூரில் எம்எல்ஏக்களை தங்கவைத்து கையெழுத்து வாங்கியது எடப்பாடிதான்.சசிகலா உத்தரவால் தான் 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.ஓ.பி.எஸ். அணியும் துணை நின்றதால் தான் ஆட்சியை தக்க வைத்தார்.

அதிகாரத்தில் இருந்தும் தேர்தலில் வெற்றி பெற முடியாதவர் எடப்பாடிதான்.துரோகம் மட்டுமே தெரிந்தவரான இவர், நன்றி பற்றி பேசுவது கேலிக்குரியது.அமித்ஷா எப்போதும் “உங்களுக்கு விருப்பமானவரே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்” என்றுதான் கூறினார்;
எடப்பாடியை வேட்பாளராக சுட்டிக்காட்டவில்லை.டெல்லிக்கு சென்று 6 கார்கள் மாறி ரகசியமாக சந்தித்தவரே எடப்பாடி.தற்போது அதிமுக வாக்கு விகிதம் 20% இருந்தாலும், வரும் தேர்தலில் அது 10% ஆக குறையும்.வருகிற 2026 சட்டமன்ற தோல்விக்குக் காரணம் எடப்பாடிதான்; நாங்கள் அல்ல.
“எடப்பாடியை விமர்சித்தால் தாங்க முடியாமல் தவிக்கும் நிலை… இப்படிப்பட்டவரே நம்பிக்கை பற்றி பேசுகிறார்!” என தினகரன் கடுமையாக சாடினார்.
English Summary
Edappadi talking about BJP like Satan reciting Vedas TTV Dhinakaran attacks