கணவனும், மனைவியுமாக இளம்பெண்ணை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டிய அதிமுக நிர்வாகி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் அருகேயுள்ள தேவாரம் டி.கே.வி.பள்ளி தெரு பகுதியை சார்ந்தவர் ராஜிவ் (வயது 35). இவர் உத்தமபாளையம் பேரூராட்சி ஆறாவது வார்டு அதிமுக செயலாளராக இருந்து வருகிறார்.

இவருக்கு திருமணம் முடிந்து பிரியதர்சினி என்ற மனைவி இருக்கிறார். இதே பகுதியை சார்ந்த பெண்ணுடன் ராஜிவ் நட்பு அடிப்படையில் பழகி வந்துள்ளார். இந்நிலையில், காமுகன் ராஜிவ் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளான். 

இதனைவைத்து பெண்ணை மிரட்டி வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளான். பின்னர் தனது அலைபேசியில் இருந்த பெண்ணின் ஆபாச பதிவுகளை காண்பித்து ராஜிவ் மற்றும் அவனது மனைவி ஆகியோர் மிரட்டியுள்ளனர். 

ரூ.2 இலட்சம் பணம் தராத பட்சத்தில், இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திடுவேன் என்று மிரட்டியுள்ளான். இதனால் பயந்துபோன பெண்மணி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இது குறித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜீவை கைது செய்த நிலையில், தலைமறைவான அவனது மனைவியை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Party member Threat woman police arrest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal