கோவை அதிமுக எம்எல்ஏவின் மகன் திடீர் மரணம்.! - Seithipunal
Seithipunal


கோவை அதிமுக எம்எல்ஏவின் மகன் திடீர் மரணம்.!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடக்கு தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அம்மன் அர்ஜுனன். இவருடைய மகன் கோபாலகிருஷ்ணன். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

இதனால், அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கோபாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். கோபாலகிருஷ்ணனின் இந்த திடீர் இறப்பு அவரது குடும்பத்தார் மட்டுமல்லாது கோவை மாவட்ட அதிமுகவினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும், மகனை இழந்து சோகத்தில் வாடும் எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் தங்களது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

admk mla amman arjun son died


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->