மேடையில் உதயநிதி முன் நிற்கவைக்கப்பட்ட பட்டியலின நிர்வாகி! மாமன்னன்..! தலித் விரோத திமுக! ஜெயக்குமார் கண்டனம்!
ADMK Jeyakumar Condemn to DMK Udhay
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அண்ணல் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் உதயநிதி!
பின்னர் மேடையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த மேடையில் புதுக்கோட்டை மாவட்ட துணை செயலாளர்-அரையப்பட்டி திரு.மதியழகன்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரிய தலைவர் திரு.இளையராஜா ஆகிய இருவருக்கும் இருக்கை மறுக்கப்பட்டுள்ளது.
தன் கட்சியில் பலமான பொறுப்பில் இருக்கும் பட்டியலின நிர்வாகிகளை நிற்க வைக்கும் அநீதியை அனுமதித்தாரா உதியநிதி!
மாமன்னன் படத்தில் சொன்னதை போல 'உட்காருங்க!' என உதயநிதி ஏன் சொல்லவில்லை?
இரண்டு மாதங்களுக்கு முன் இதே தாட்கோ இளையராஜாவை அமர வைத்து போட்டோ ஷீட் எடுத்தார் உதயநிதி!
தற்போது விளம்பர மோகம் கொண்ட பொய் முகத்திரையை நேற்றைய நிகழ்வு கிழித்தெறிந்துள்ளது. தலித் விரோத திமுக" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Jeyakumar Condemn to DMK Udhay