கள்ளச்சாராய விவகாரத்தில் கப்-சிப்! யாரை கண்டு‌ அஞ்சுகின்றனர் ரஜினி, கமல், சூர்யா?! ஜெயக்குமார் விளாசல்!  - Seithipunal
Seithipunal


கள்ளச்சாராயத்தால் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மருத்துவமனையின் தூண்களிலும் சாலைகளிலும் கதறி கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைப்பதாக தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இத்தனைக்கு பிறகும் திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், நடிகர் விஜய் மட்டும் தனக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிட்ட தமிழர்களுக்கு இடர்நேரங்களில் துணை நிற்க வேண்டும் என உணர்ந்து குரல் கொடுத்துள்ளார்!

மீதமுள்ளவர்கள் யாரை கண்டு‌ அஞ்சுகின்றனர்?

ஏழை எளிய மக்கள் 200.ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 100 கோடி,200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள்.

அந்த மக்களுக்கு இது போன்ற நேரங்களில் ஆதரவை கொடுக்க வேண்டிய சமூக பொறுப்பு உங்கள் அனைவருக்கும் கட்டாயம் இருக்கிறது.

மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை‌ சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க‌ மாட்டார்கள்" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மருத்துவமனைகளில் 80 க்கும் மேற்பட்டோர் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கள்ளச்சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் பிரதான எதிர் கட்சிகளான அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்டவைகள் குரல் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Jayakumar Condemn to Tamil Actors for Kallakurichi Kallasarayam death


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->