பல தடைகளை கடந்த ‘துருவ நட்சத்திரம்’… விக்ரம் திரைக்கு வர உள்ளார்...! - Seithipunal
Seithipunal


நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. தமிழ் சினிமாவில் மிக நீண்ட காலமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்த படம், ஏராளமான தடைகள் மற்றும் திருப்பங்களை கடந்து தற்போது வெளியீட்டுக்கான இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படம் முதலில் 2010 ஆம் ஆண்டு நடிகர் சூர்யாவை வைத்து தொடங்கப்பட இருந்தது. ஆனால் கதை தொடர்பான கருத்து வேறுபாடுகள் காரணமாக சூர்யா இந்த திட்டத்திலிருந்து விலகினார்.

அதன் பிறகு, கதையை கேட்ட நடிகர் விக்ரம், இதில் நடிக்க முன்வந்தார்.இதையடுத்து, 2017 ஆம் ஆண்டு ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக, படப்பிடிப்பு பலமுறை தடைபட்டு, இடைநிறுத்தங்களுடன் நீண்ட காலமாக நடைபெற்று வந்தது.

இருப்பினும், அனைத்து தடைகளையும் கடந்து இறுதியாக படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.படப்பிடிப்பு முடிந்தபோதும், வெளியீடு தொடர்பான சிக்கல்கள் காரணமாக படம் திரைக்கு வருவது தொடர்ந்து தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. பலமுறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டாலும், அந்தந்த தேதிகளில் படம் வெளியாகாமல் ரசிகர்களை ஏமாற்றியது.

இந்நிலையில், தற்போது ‘துருவ நட்சத்திரம்’ பட வெளியீட்டிற்கான அனைத்து பிரச்சனைகளும் தீர்வு காணப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளோம் என அறிவித்துள்ளதால், நீண்ட காலமாக காத்திருக்கும் ரசிகர்களிடையே மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது.

பல ஆண்டுகளாக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘துருவ நட்சத்திரம்’ இறுதியாக திரையரங்குகளை நோக்கி பயணிக்குமா என்பதே தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

After overcoming several obstacles Vikrams Dhruva Natchathiram all set to hit screens


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->