பாஜக உடன் கூட்டணி வேண்டாம் - எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிர்ச்சி முடிவு! சிக்கலில் அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருமித்த கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்று ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி, அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில், இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசிய விவகாரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும், அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே வெளியான ஒரு பரபரப்பு தகவலின்படி, அண்ணாமலை குறித்து பாஜக மேலிடத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கின்றது.

மேலும், அண்ணாமலை மீது பாஜக மேலிடம் சரியான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பாஜவுடனான கூட்டணியை மறு பரிசீலனை செய்வது குறித்து முடிவு எடுக்க உள்ளதாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார் என்றும் வெளியான அந்த தகவல் தெரிவிக்கின்றது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS Speech About ADMK BJP Alliance


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->