அரசு பள்ளியில் சேர்ந்தால் 1000 ரூபாய் உதவித்தொகை.. அசத்தும் பள்ளி தலைமை ஆசிரியர்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கல்வி கற்காத மாணவர்கள் யாருமே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்கும் வண்ணம் செயல்பட தொடக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவர்களுடைய இடங்களுக்கே சென்று சேர்க்கை நடத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரான ஜெயக்குமார் ஞானராஜ் தன்னுடைய பள்ளிக்கு அருகில் உள்ள ஆலைக்கு நேரில் சென்று அங்கு தங்கி பணிபுரியும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்களிடம் கல்வியின் முக்கியத்துவத்தையும், தமிழக அரசு வழங்கும் சலுகைகளையும் எடுத்துரைத்துள்ளார்.

மேலும் புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தன்னுடைய சொந்தப் பணத்திலிருந்து 1000 ரூபாய் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தலைமையாசிரியர் இந்த பள்ளியில் சேர்வோருக்கு பல்வேறு உதவிகளை தன்னுடைய சொந்த பணத்தில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admission in govt school 1000 scholarship in srivilliputhur


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->