அப்பா.. என் அப்பாவே எனக்கு குழந்தையா பிறந்திருக்கிறார்..! நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி.!!
Actor Sivakarthikeyan Second Baby Male Siva Feels Happy born of His Father
நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தனது தந்தையே எனக்கு மகனாக பிறந்துள்ளார் என்று நெகிழ்ச்சி பதிவை ட்விட்டரில் இட்டுள்ளார்.
திரைத்துறையில் கடுமையான உழைப்புக்கும், வலிக்கும் உள்ளாகி வந்த நடிகரில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சிவா என்றும் சிவகார்த்தி என்றும் ரசிகர்களால் அழைக்கப்படும் சிவாவுக்கு விஜய் தொலைக்காட்சி கொடுத்த அங்கீகாரத்தால் இன்று தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகிவிட்டார்.
மெரினா, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் தொடங்கி இன்று டாக்டர் படம் வரை என பல படங்களில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், திரைப்பட தயாரிப்பாளராகவும் வளர்ந்துள்ளார். அவரது முதல் தயாரிப்பு படமான கனா பலரின் கவனத்தை பெற்று பெரும் பாராட்டுகளை அள்ளித்தந்தது.

நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை சிறுவயதிலேயே உயிரிழந்த நிலையில், அவரது தாயார் கஷ்டப்பட்டு அவரை படிக்க வைத்து ஆளாக்கினார். இதனையடுத்து, திரைத்துறையில் பல கஷ்டங்கள் பட்டு தொடர் உழைப்பினால் முன்னேறி வந்துள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு ஆர்த்தி என்ற மனைவி உள்ள நிலையில், இருவருக்கும் ஆரதானா என்ற அழகிய மகள் இருக்கிறார். அவர் கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள பாடலை பாடிய நிலையில், அது பெரும் வைரலாகியது அனைவரும் அறிந்த விஷயம். இந்நிலையில், மீண்டும் கர்ப்பமாக இருந்த ஆர்த்திக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது தொடர்பான தகவலை ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், " 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி அம்மாவும் குழந்தையும் நலம் " என்று தெரிவித்துள்ளார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Actor Sivakarthikeyan Second Baby Male Siva Feels Happy born of His Father