தேர்வில் சாதனை...வாழ்க்கையில் சோதனை...! 10-ஆம் வகுப்பு மாணவியைக் கர்ப்பமாக்கிய சக மாணவன்...! - பெற்றோரை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்...! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் தலைவாசல் அருகிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, அப்பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள், அந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது தாயாரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு சிறுவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட சிறுவர்களில் ஒருவன் சமீபத்தில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் பங்கேற்றிருந்தான். அவன் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பாக, 500 மதிப்பெண்களில் 470 மதிப்பெண்கள் பெற்றிருந்தது தெரியவந்தது.

உயர்ந்த மதிப்பெண் எடுத்த மாணவன் என்ற பெருமையை தர வேண்டிய இந்த சாதனை, அவனது செயலால் வேதனையாக மாறியுள்ளதாக காவலர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Achievement exams test life fellow student got 10th grade student pregnant shocking incident that shook parents


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->