நாகர்கோவில் அருகே பரபரப்பு...! ஓடும் ரயிலில் மருந்துக் கடை உரிமையாளர் திடீர் மரணம்...! நடந்தது என்ன...?
There commotion near Nagercoil drugstore owner died suddenly moving train What happened
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஓடைத்தெரு மணிநகர் பகுதியை சேர்ந்த 40 வயதுடைய கணேசன், அப்பகுதியில் மருந்தகம் நடத்தி வந்தார். திருமணம் ஆகாத அவர், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த தீர்மானித்திருந்தார்.

இதற்காக தனது உறவினர் காளிதாஸுடன் மதுரையில் இருந்து புனலூர் நோக்கிச் சென்ற ரெயிலில் பயணம் மேற்கொண்டார். நேற்று அதிகாலை நாகர்கோவில் அருகே ரெயில் வந்து கொண்டிருந்தபோது, கணேசனுக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிது நேரத்திலேயே அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறியது.இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர் காளிதாஸ் உடனடியாக நாகர்கோவில் ரெயில்வே காவலர்களுக்கு தகவல் அளித்தார்.
தகவல் கிடைத்ததும் காவலர்கள் ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்து, நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு விரைந்தனர்.
ரெயில் நிலையத்தை ரெயில் வந்தடைந்தவுடன், மருத்துவ குழுவினர் விரைந்து சென்று ரெயில் பெட்டிக்குள் இருந்த கணேசனை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை ரெயில்வே காவலர்கள் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நாகர்கோவில் ரெயில்வே காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தி பயணம், உயிரிழப்பில் முடிந்த சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் பகுதி மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
There commotion near Nagercoil drugstore owner died suddenly moving train What happened