ஐ.டி ஊழியர் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது.!
accuest arrested for it employee kavin murder case
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் கவின்குமார். இவர் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணி யாற்றி வந்தார். இந்த நிலையில், விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த கவினை சுர்ஜித் என்பவர் நெல்லையில் வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
கொலை செய்தவரின் சகோதரியைக் காதலித்ததால் நிகழ்ந்த இந்த கொலை சம்பவம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்தில் இளம்பெண்ணின் பெற்றோர்களுக்கும் தொடர்பு இருப்பதாக உயிரிழந்த கவின்குமாரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியதுடன், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கவின்குமார் கொலை வழக்கில், கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டதனையடுத்து சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தொடர்ந்து போலீசார் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் போலீசார் இன்று நெல்லை மாநகர காவல்துறையினர் சுர்ஜித்தை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
accuest arrested for it employee kavin murder case