கன்னியாகுமரி மாவட்டம்! ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மீது சிமெண்ட் கலவை லாரி ஏறி இறங்கியதில் 5 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனம் மீது சிமெண்ட் கலவை லாரி ஏறி இறங்கியதில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்த பிரேம் நாத் என்பவர் தனது ஆட்டோவில் சாலையை கடப்பதற்காக காத்திருந்தார். அப்பொழுது இரணியல் பகுதி அருகே அந்த வழியே வேகமாக வந்த சிமெண்ட் கலவை லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, ஆட்டோ மற்றும் அருகில் இருந்த இரு சக்கர வாகனம் மீது ஏறி இறங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accident when boarding cement mix truck on auto in kanniyakumari


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->