தமிழகத்தில் முதல் முறையாக குளிர்சாதன மின்சார பேருந்து சேவை - எப்போதிலிருந்து தொடக்கம் தெரியுமா?
ac electric bus service start from coming 11 in chennai
வருகின்ற 11 ஆம் தேதி முதல் சென்னையில் முதல் முறையாக குளிா்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநா் பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:- "டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இயற்கை எரிவாயு மற்றும் மின்சார பேருந்துகளை இயக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 625 மின்சார பேருந்துகள் 5 பணிமனைகளின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் இயக்க முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, சென்னை வியாசா்பாடி பணிமனையில் இருந்து 120 மின்சார பேருந்துகளை கடந்த ஜூன் 30-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
அடுத்தகட்டமாக பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து 55 குளிா்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளையும், 80 சாதாரண மின்சார பேருந்துகளையும் இயக்க முடிவு செய்துள்ளோம்.
வருகிற 11-ந்தேதி முதல் இந்த பேருந்துகளின் சேவை தொடங்கப்படும். தொடா்ந்து பிற பணிமனைகளில் இருந்தும் மின்சார பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
ac electric bus service start from coming 11 in chennai