அதிகார துஷ்பிரயோகமா...? ஊழல் புகாரா...? 2 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட்...! - தலைமை அலுவலகத்தில் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் பல்வேறு துறை ஆய்வுக்கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளின்போது, தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் சமீபத்திய ஒதுக்கீடுகள் மற்றும் அனுமதி வழங்கும் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படாமல், அவசர அவசரமாக ஒப்புதல்கள் வழங்கப்பட்டதாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாக கொண்டு முறையான விசாரணை நடத்தவும், நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து முறைகேடான நிர்வாக தலையீடு மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் காசி மற்றும் மரபுசாரா எரிசக்தி தலைமை பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் பசுமை எரிசக்தி கழகத்தின் ஓய்வு பெற்ற தொழில்நுட்ப இயக்குநர் மங்களநாதனின் ஓய்வூதிய பலன்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகவும், மின்வாரிய விதிமுறைகளுக்கு இணங்க மேல்நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Abuse power Corruption complaint 2 high ranking officials suspended Commotion head office


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->