ஆரஞ்சு நிற பால் பாக்கெட் ரூ.66க்கு விற்பனை! கண்டுகொள்ளாத ஆவின் அதிகாரிகள்! - Seithipunal
Seithipunal


அனைத்து வகையான பால் பாக்கெட்களையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை புகார் அளித்தும் ஆவின் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் சமீபத்தில் அதிக கொழுப்பு சத்து நிறைந்த 500 மில்லி லிட்டர் ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட் விலையை 24 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும், சிவப்பு நிற பால் பாக்கெட்டின் விலை 30 ரூபாயிலிருந்து 34 ரூபாயாகவும் உயர்த்தியது.

அதேபோன்று பச்சை நிற பால் பாக்கெட் விலை 22 ரூபாய்க்கும், நீல நிற பால் பாக்கெட் விலை 20 ரூபாய்க்கும் வழக்கம் போல் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த விலை உயர்வானது கடந்த 5ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆவின் பால் விற்பனை செய்யும் முகவர்கள் மற்றும் பாலாக உரிமையாளர்களுக்கு 75 காசுகள் ஆவின் நிர்வாகத்தால் கமிஷனாக வழங்கப்படுகிறது. 

முகவர்களிடமிருந்து இருந்து பால் வாங்கும் தனியார் கடை வியாபாரிகள் 500 மில்லி லிட்டர் ஆரஞ்சு நிற பால்பாக்கெட் ரூ.3 வரை கூடுதல் விலை வைத்து விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் ரூ.66 மக்கள் வாங்க வேண்டிய சூழல் உண்டாகியுள்ளது. சில இடங்களில் பால் முகவர்களே கூடுதலாக ரூ.1 விலை வைத்து பால் பாக்கெட்டைகளை விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது இதனை ஆவின் நிர்வாக அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

நீண்ட நாட்களாக கமிஷன் தொகையை அதிகரித்து தர வேண்டும் என பால் முகவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதிக விலைக்கு விற்பனை செய்து வருவோர் மீது நடவடிக்கை எடுத்தால் பால் கொள்முதல் நிறுத்தி விடுவார்கள் என்பதால் அதிகாரிகள் இந்த விஷயத்தில் கண்டு கொள்ளாமல் இருப்பதாக தெரிய வருகிறது.

இதனால் தமிழக அரசு நிர்ணயத்தை விலையை விட கூடுதல் விலைக்கு பால் பாக்கெட் வாங்க வேண்டிய சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனை தமிழக அரசு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aavin milk agents selling milk packets at extra cost


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->