தாலியை கழற்றி வைத்துவிட்டு கள்ளக்காதலனுடன் இளம்பெண் செய்த செயல்..அதிர்ந்து போன குடும்பம்!  - Seithipunal
Seithipunal


தாலியை கழற்றி வைத்துவிட்டு கள்ளக்காதலனுடன் விஷம் குடித்த இளம்பெண் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையைச் சேர்ந்த காளிமுத்து என்பவருடைய  மனைவி சினேகா, இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளாகும் நிலையில் ஒரு  மகனும், ஒரு  மகளும் உள்ளனர். தற்போது இந்த தம்பதி  குழந்தைகளின் படிப்புக்காக காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள 3-வது மைல் என்ற கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கப்பலூத்தூ கிராமத்தைச் சேர்ந்த அஜித்  காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள புளியங்காடு பகுதியில் வசிக்கும் அவரது சித்தி தீபா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அஜித்துக்கும், சினேகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும், வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு சினேகா மற்றும் அஜித் இருவரையும் அழைத்து வந்து சமாதானம் செய்து அவரவர் வீட்டுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

இந்த நிலையில் காளிமுத்து அவரது மனைவி சினேகா மற்றும் குடும்பத்தினர் திருநள்ளாறு கோவிலுக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலை முள்ளுக்குறிச்சியில் உள்ள அவரது தங்கையின் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். பின்னர் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மீண்டும் அதிகாலை 4 மணிக்கு வந்து பார்த்தபோது சினேகா தான் அணிந்திருந்த தாலிக்கொடியை கழற்றி வைத்துவிட்டு மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் சினேகா மற்றும் அவரது கள்ளக்காதலன் அஜித் இருவரும் ராசிபுரம் அருகே உள்ள காட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். அபின்னர் அவர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தந்தார். அதன் பேரில் இருவரும் மீட்கப்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young woman removed her wedding chain and was involved with her secret lover The family was shocked


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->