செல்லப் பிராணியான நாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க லண்டனில் இருந்து காஞ்சிபுரம் வந்த பட்டதாரி இளைஞரின் நெகிழ்ச்சி செயல்..! - Seithipunal
Seithipunal


 தன் வீட்டு செல்லப் பிராணி நாய் இறந்த செய்தி கேட்டு லண்டனில் இருந்து வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றச் சம்பவம் காஞ்சிபுரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அருகே உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனிராஜ் - ஞானசௌந்தரி தம்பதியினர். பழனிராஜ் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களின் மகன் லோகேஷ், முதுநிலை கணினி அறிவியல் படித்துவிட்டு லண்டனில் பணியாற்றி வருவதோடு அங்கேயே மேல்படிப்பும் படித்து வருகிறார்.

இவர்களது வீட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 'வீரூ' என்ற உயர் ரக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த நாயையும் குடும்பத்தில் உள்ளவர்கள் போலவே வளர்த்து வந்துள்ளனர்.

லோகேஷ் லண்டன் சென்ற நிலையில், இவரது பெற்றோர் வீருவை கவனித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று வீரூவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, நாயை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே அந்த நாய் இறந்துவிட்டது. இது குறித்து லண்டனில் உள்ள மகன் லோகேஷுக்குத் பெற்றோர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

தான் வளர்த்த செல்லப்பிராணி நாய் இறந்த தகவல் கேட்டு கதறி அழுத லோகேஷ் லண்டனில் உடனடியாக காஞ்சிபுரம் வர புறப்பட்டுள்ளார்.  உடனடியாக டிக்கெட் எடுத்ததால் விமானத்துக்கு கூடுதல் செலவு ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று நினைத்து, காஞ்சிபுரம் வந்தடைந்துள்ளார். 

பின்னர், உயிரிழந்த செல்ல நாயின் உடலைக் கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தியுள்ளார். வீரூவின் உடலை உறைப்பெட்டியில் (ஃப்ரீசர் பாக்ஸ்) வைத்து மாலை அணிவித்து குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதன பின்னர் மனிதர்களுக்குச் செய்வது போன்றே அனைத்து இறுதிச் சடங்குகளும் செய்யப்பட்டு வீரூவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தான் வளர்த்த செல்ல நாய்க்காகப் லண்டனில் இருந்து வந்து இளைஞர் அஞ்சலி செலுத்தி இறுதிச் சடங்கில் பங்கேற்றது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A young man traveled from London to Kanchipuram to attend the funeral of his pet dog


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->