''சர்க்கரைத் தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவர முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பார்''; அமைச்சர் வினோத் நம்பிக்கை..! - Seithipunal
Seithipunal


வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத் தலைமையில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் உள்ள சர்க்கரைத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், வேளாண் துறை செயலர் ந.சுப்பையன், சர்க்கரைத் துறை ஆணையர் இரா.கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் ''சர்க்கரைத் தொழிலை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவர முதல்வர் விஜய் நடவடிக்கை எடுப்பார்'' என்று அமைச்சர் ஆர்.வினோத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தனியார் சர்க்கரை ஆலைகளின் பிரதிநிதிகள் தங்களது ஆலைகளின் தற்போதைய செயல்பாடுகள், கரும்பு பதிவு, கரும்பு அரவை, கரும்பு கட்டுமானம், கரும்பு சாகுபடி பரப்பு, ஆலைகளின் உற்பத்தித் திறன் மற்றும் ஆலைகள் எதிர்கொள்ளும் பல்வேறு நடைமுறைகள் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து விளக்கினர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆர்.வினோத் பேசுகையில் கூறியதாவது; தனியார் சர்க்கரை ஆலைகள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசித்து, அவற்றின் நடைமுறைச் சாத்தியக்கூறுகள் மற்றும் அரசின் கொள்கை நிலைப்பாடுகள் குறித்து உரிய முறையில் ஆய்வு செய்து, முதல்வரின் கவனத்துக்கு எடுத்து சென்று தீர்வு காணப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கரும்பு விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படுவதுடன், சர்க்கரை ஆலைகள் சிறப்பாக இயங்குவதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதும் அரசின் முக்கிய நோக்கமாகும் என்று தெரிவித்துள்ளார்.

 மேலும், கரும்பு விவசாயிகளின் நலன், கரும்பு சார்ந்த தொழில் மற்றும் சர்க்கரை ஆலைகளின் நிலைத்தன்மை ஆகிய 3-ஐயும் ஒருங்கிணைத்து, சர்க்கரைத் தொழிலை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Vinoth stated that Chief Minister Vijay will take steps to put the sugar industry on a path of growth


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->