அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேர் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதற்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு..! - Seithipunal
Seithipunal


அதிமுகவைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், நாளை காலை சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

அதாவது, கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மதுராந்தகம் - மரகரம் குமரவேல், தாராபுரம் - சத்தியபாமா, அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா, பெருந்துறை - ஜெயக்குமார், கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை - சி.விஜயபாஸ்கர் ஆகிய ஆறு பேருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளது. 

அதன்  சூழலில், குறித்த ஆறு பேரின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம் எல் ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில் கூறப்பட்டதாவது;  இந்த வழக்கில் சபாநாயகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின், ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்றும், ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கின்றனர். 

இது குறித்து சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும், ராஜினாமாவை ஏற்கும் முன், தகுதிநீக்க புகார் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை எனவும், குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநருக்கும் புகார் அளிக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம் சபாநாயகர் தரப்பில் கூறுகையில்; ராஜினாமா ஏற்றுக் கொண்டதால், தகுதிநீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகி விடாது  எண்டுறம், ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானது தான் என்று கூறப்பட்டது.

அத்துடன்,  ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது என்றும், உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகி விடும். சுய விருப்பப்படி ராஜினாமா செய்தாரா என்பதை மட்டும் தான் விசாரிக்க முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

 மேலும், அமைச்சர் பதவி, பணத்துக்காக ராஜினாமா செய்தார்களா, குதிரை பேரம் நடந்ததா என்பதை தகுதிநீக்க நடவடிக்கையில் தான் விசாரிக்க முடியும் என்றும், ராஜினாமாவின் நோக்கம் என்ன என்பதை, ராஜினாமாவை ஏற்கும் போது விசாரிக்க முடியாது. சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதிடுகையில், எம்.எல்.ஏ.வாக இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு வேறு கட்சிக்கு ஆதரவளித்தால் தான் ஊழல் நடவடிக்கை என்றும், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, வேறு கட்சிக்கு இணைவது, ஜனநாயக அரசியல் என்று குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், எம்.எல்.ஏ.வின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதால், தகுதி நீக்க நடவடிக்கையை தன்னிச்சையாக செல்லாததாக்கி விடாது எனவும்,  எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா உண்மையானவை,  சுய விருப்பப்படி அளிக்கப்பட்டவை. நேரில் சந்தித்து, கைப்பட எழுதி அளித்த ராஜினாமா கடிதத்தின் உண்மைத்தன்மையை சந்தேகிக்க முடியாது என்றும், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை தொகுதி மக்கள் தான் கேள்வி கேட்க முடியும் என வாதிடப்பட்டது.

அடுத்ததாக சட்டப்பேரவை செயலாளர் தரப்பில், உண்மையாக , சுய விருப்பத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகல் கடிதம் அளித்தால், அதை சபாநாயகர் ஏற்காமல் இருக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தருந்த நிலையில், நாளை காலை இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளிக்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Verdict tomorrow in the case challenging the Speakers acceptance of the resignations of six AIADMK MLAs


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->