சேப்பாக்கம் மைதானத்தில் வெங்கட ராகவன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அஸ்வின் பெயரில் விரைவில் ஸ்டாண்ட்..!
Stands named after Krishnamachari Srikkanth and Ashwin to come up soon at Chepauk Stadium
இந்திய கிரிக்கெட் அணியில் தமிழகத்திலிருந்து கோபாலன், வெங்கட ராகவன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சிவராமகிருஷ்ணன், WV ராமன், ராபின் சிங், சடகோபன் ரமேஷ், ஹேமங் பதானி, தினேஷ் கார்த்திக், எல் பாலாஜி, முரளி விஜய் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் வரை 20க்கும் மேற்பட்ட கிரிக்கெட் வீரர்கள் விளையாடியுள்ளனர்.
அந்தப்பட்டியல் விஜய் சங்கர், நடராஜன், வாசிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி என நீண்டு வருகிறது. இதில் மிக முக்கியமாக வெங்கட ராகவன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆகிய இருவரும் இந்திய அணியின் கேப்டனாக வழி நடத்தியுள்ளனர். இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இருந்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர பவுலராக 537 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி பல உலக சாதனைகளை படைத்தவர் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்தியாவிற்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய 02-வது வீரராகவும் உள்ளார்.

இந்தியாவிற்காக பல்வேறு சாதனைகள் படைத்து தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்தவகையில் முன்னாள் இந்திய வீரர்களான வெங்கடராகவன், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 03 பேருக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர்களுடைய பெயரில் ஸ்டாண்ட் வைக்கப்படவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை அஸ்வின் அவருடைய யூடியூப் சேனலில் உறுதிசெய்துள்ளார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
English Summary
Stands named after Krishnamachari Srikkanth and Ashwin to come up soon at Chepauk Stadium