திமுக ஆட்சியில் சென்னையில் மழைநீர் ஏன் தேங்கியது ஏன்..? ஸ்டாலின் ஆட்சியில் எந்த பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை; அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி..! - Seithipunal
Seithipunal


''திமுக ஆட்சியில் சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன் என்பதற்கு ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும். திமுக ஆட்சியில் எந்த பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை.'' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் வியாழக்கிழமை (அக்.8) மாலை பழநி தேவஸ்தான தங்கும் விடுதிக்கு சென்றார். அதன் பின்னர், ரோப் காரில் மலைக்கோயிலுக்கு சென்ற அவர், சாயரட்சை பூஜையில் கலந்து கொண்டார். அப்போது ராஜ அலங்காரத்தில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்து விட்டு, இரவில் மலைக்கோயிலில் தங்கரதம் இழுத்து வழிபட்டார்.

அதற்கு முன்னதாக, பழநி அடிவாரத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது;

முதல்வர் விஜய்யின் நல்லாட்சிக்கு மக்கள் வழங்கும் நற்சான்றாகவும் அத்தாட்சியாகவும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் அமையும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரம்மாண்டமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றும், மக்கள் வியக்கும் அளவுக்கு வாக்கு வித்தியாசம் இருக்கும் எனவும், முதல்வரின் சாதனைகளை அங்கீகரிக்கும் வரலாற்று நிகழ்வாக இந்த இடைத்தேர்தல் அமையும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், திமுக ஆட்சியில் சென்னையில் மழைநீர் ஏன் தேங்கியது என்பதற்கு ஸ்டாலின் தான் பதிலளிக்க வேண்டும் எனவும், திமுக ஆட்சியில் எந்த பணிகளும் முழுமையாக நடைபெறவில்லை எனவும், கடந்த 4 மாதங்களில் தான் மழைநீர் வடிகால் பணிகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த இடைத்தேர்தல் முடிவுக்கு பின் அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வருவது குறித்து பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும், 2027 மார்ச் வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற இருப்பதால் அதுவரை புதிய மாவட்டங்கள் உருவாக வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே எந்தெந்த வருவாய் வட்டம், கோட்டங்களை பிரிப்பது என முடிவு செய்யப்படும் என்றும், பழநி மானூர் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது விஷமிகள் செய்தது தவறு. தவறு செய்தது யார் என்பதை அறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Minister Sengottaiyan questions why rainwater stagnated in Chennai during the DMK regime


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->