மின்சார ரெயிலில் பெண் பயணிகளிடம் சில்மிஷம்..போலீஸ்காரர் கைது!
A woman passenger was molested on the electric train Policeman arrested
மராட்டிய மாநிலம் மிராபயந்தர் அருகே மின்சார ரெயிலில் பெண் பயணிகளிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓடும் பேருந்தில் பெண்களுக்கு பாலில் தொல்லை,ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை, விமானத்தில் பாலிய தொல்லை என நீண்டு கொண்டே செல்கிறது பெண்களுக்கான எதிரானபாலியல் சில்மிஷங்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடும் இரவில் வேலூரில் இளம்பண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது இல்லாமல் ஓடும் ரயில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளா சமீபத்தில் ரயிலில் பாலியல் தொல்லையானது அளிக்கப்பட்டது .இந்த சம்பவத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்,இந்தநிலையில் மராட்டிய மாநிலம் மிராபயந்தர் அருகே மின்சார ரெயிலில் பெண் பயணிகளிடம் சில்மிஷம் செய்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மராட்டிய மாநிலம் மிராபயந்தர்- வசாய்விரார் கமிஷனரேட் அலுவலகத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்த அமோல் சப்காலே என்பவர் சம்பவத்தன்று விரார் நோக்கி சென்ற மின்சார ரெயிலின் மகளிர் பெட்டியில் போலீஸ் சீருடையில் ஏறியுள்ளார் . அப்போது அவர் குடிபோதையில் இருப்பதை பெண் பயணிகள் அறிந்தாக கூறுகின்றனர்.
இதையடுத்து போதையில் இருந்த போலீஸ்காரர் மகளிர் பெட்டியில் ஏறிய அவர் பெண் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை நடத்துவதாக கூறி அங்கு நின்று கொண்டிருந்த பெண் பயணிகளின் உடலை தொட்டு சில்மிஷம் செய்துள்ளார். இதனை கண்ட சில பெண் பயணிகள் அவரது நடவடிக்கையை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு புகார் அளித்ததனை தொடர்ந்து அ பெண் பயணிகள் போலீஸ்காரர் அமோல் சப்காலேவை பிடித்து ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் அமோல் சப்காலேவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A woman passenger was molested on the electric train Policeman arrested