மலைப்பகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பான திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


மலைப்பகுதி உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஸ்வெட்டர்!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இலவச பேருந்து பயணம், இலவச சைக்கிள், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், ஸ்மார்ட் வகுப்புகள் திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளது. 

மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மழைக்காலங்களில் அதிகப்படியான குளிரினால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் நீலகிரி போன்ற மலைப்பிரதேச மாவட்டங்களில் வருடத்தின் அனைத்து நாட்களிலும் குளிரான சூழல் நிலவு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கம்பளிச்சட்டை (ஸ்வெட்டர்) வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

 தமிழக அரசு மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கம்பளிச்சட்டை (ஸ்வெட்டர்) வழங்க ஒப்பந்த புள்ளி கோரி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை அடுத்த கல்வியாண்டு (2022-2023) முதல் செயல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A sweater for the students of the government school in the hills


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->