புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஏஐடியூசி சார்பில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு தழுவிய அளவில் 2025 மே 20-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த, மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது, இப் போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டைஏஐடியூசி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு AITUC மாநில பொதுச் செயலாளர் K.சேதுசெல்வம் தலைமை வகித்தார். AITUC மாநில கௌரவ தலைவர் V.S.அபிஷேகம், மாநிலத் தலைவர் I. தினேஷ் பொன்னையா CITU மாநில செயலாளர் G.சீனுவாசன், INTUC மாநில பொதுச் செயலாளர் P.ஞானசேகரன், LPF மாநில அமைப்பாளர் S.அண்ணா அடைக்கலம், மாநில தலைவர் P. அங்காளன், AICCTU மாநில பொதுச் செயலாளர் S. புருஷோத்தமன், LLF மாநில செயலாளர் M.செந்தில், MLF மாநில செயலாளர் வேதா வேணுகோபால், NDLF மாநில தலைவர் K.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்ட முடிவுகள்:
2025.மே.20 ஆம் தேதி புதுச்சேரியில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா சிலை அருகில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது
கோரிக்கைகள்:
1. புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற்றிடு!
2. அமைப்புசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர், திட்டம் சார்ந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000/- மாதமொன்றிற்கு நிர்ணயம் செய்திடு.
3. ஒப்பந்த, தினக்கூலி, வெளிச்சந்தை முறை, பயிற்சியாளர் போன்ற பெயர்களில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவு கட்டு. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிடு!.
4. அமைப்புசாரா தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 9000மற்றும்சமூகபாதுகாப்பைஉறுதிசெய்திடு,வீடுசார்தொழிலாளர்கள்,தாள்சேகரிக்கும்தொழிலாளர்கள்,வியபள்,வீட்டுவேலைசெய்யும்தொழிலாளர்கள்,கட்டுமானதொழிலாளர்கள்,புலம்பெயர்தொழிலாளர்கள்,திட்டம்சார் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள்,கடை நிறுவன தொழிலாளர்கள், சுமை பணி தொழிலாளர்கள்,உப்பள தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள், கார், ஆட்டோ, டாக்ஸி தொழிலாளர்கள்,மீனவசமூகத்தினர்ஆகியோரைபதிவுசெய்துஓய்வூதியம்உட்படசமூகபாதுகாப்பு திட்டங்களை உருவாக்கிடு.
5. பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்பவும் அமுலாக்கு!
6. போனஸ், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை போன்றவைகளுக்கு உள்ள உச்சவரம்பை நீக்கு. பணிக்கொடை தொகையை அதிகப்படுத்து!
7. விண்ணப்பித்த 45 நாட்களுக்குள்ளாக தொழிற்சங்கத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்கு!
8. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, உணவு, மருந்து, வேளாண் இடுபொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்திடு, பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை கணிசமாக குறைத்திடு, உணவு பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தி, பொது விநியோக திட்டத்தை பரவலாக்கு.
9. பொதுத்துறை நிறுவனங்கள், அரசு துறைகள், தனியார் மயத்தை நிறுத்திடு ,தேசிய பண மீட்டல் திட்டத்தை (NMP) ரத்து செய், தற்போது உள்ள சுரங்க சட்டத்தை திருத்திடு, நிலக்கரி சுரங்கங்கள் உட்பட சுரங்கங்களின் 50% லாபத்தை ஆதிவாசிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட உள்ளூர் சமூக மேம்பாட்டிற்கு ஒதுக்கிடு.
10. விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை C2 + 50 என்ற முறையில் நிர்ணயம் செய். விவசாயிகளுக்கு கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்று!.
11. மின்சாரத் திருத்த சட்டத்தை திரும்பப் பெறு!. மின்சாரத்தை தனியார்மயமாக்காதே!. ஸ்மார்ட் மீட்டர் முறையை கைவிடு!
12. வேலை பெறுவதை அடிப்படை உரிமையாக்கு!. காலிப் பணியிடங்களை நிரப்பு!. ம.கா.தே.ஊ.வே திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்து!
13. கல்வி, மருத்துவம், தண்ணீர் அனைவருக்கும் கிடைப்பதை உரிமையாக்கு!. புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறு!. அனைவருக்கும் வீட்டு வசதியை உறுதி செய்திடு!
14. வன உரிமைச்சட்டத்தை கடுமையாக அமுலாக்கு!.
2023 - வனப் பாதுகாப்புச் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற்றிடு!. 15. கட்டட தொழிலாளிக்கும் இஎஸ்ஐ திட்டத்தை விரிவுபடுத்து!. புலம்பெயர் தொழிலாளர் சட்டத்தை வலிமைப்படுத்து!
16. பெரும் செல்வந்தர்களுக்கு வரி விதித்திடு, கார்ப்பரேட் வரியை அதிகப்படுத்திடு, சொத்து வரி மற்றும் பரம்பரை வரியை மீண்டும் கொண்டு வந்திடு.
17. அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நிறுத்து!. கருத்துரிமை,
மதச் சுதந்திரம்,
பன்முக கலாச்சாரம், கூட்டாட்சி முறை மீதான தாக்குதலை நிறுத்து!.
18. புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தை உரிய நிதி ஒதுக்கீட்டின் மூலம் செயல்படுத்தி ஊக்கப்படுத்திடு!
19. புதுச்சேரி அரசு 2024 ஆம் ஆண்டு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறைப்படுத்திடு.
20. மூடப்பட்டுள்ள பஞ்சாலைகள் மற்றும் செயல்படாமல் உள்ள பாசிக், பாப்ஸ்கோ போன்ற அரசு சார்பு நிறுவனங்களை திறந்து திறன் பட நடத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடு.
21. அரசு பொதுத்துறை நிறுவனங்கள்,
அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், முகமைகள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊழியர்களின் ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்கிடு.போன்ற 21 அம்ச கோரிக்கைகள் முவைக்கப்பட்டன.