2 கொலை செய்துவிட்டு 40 வருடங்களுக்கு பிறகு சரணடைந்த நபர்!
A person who surrendered after committing murder 40 years later
கேரளாவின் கொய்கோட்டைச் சேர்ந்த கொலையாளி ஒருவர் 40 வருடங்களுக்கு முன் செய்த 2 கொலைகளை குற்றஉணர்வினால் ஒப்புக்கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
காவல் நிலையத்தில் சரணடைந்த கொலையாளி முகமது அலி 1986 ஆம் ஆண்டு, அடிக்கடி தன்னைத் துன்புறுத்தி வந்த 20 வயது இளைஞனை ஒரு நாள் உதைத்து கால்வாயில் தள்ளி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த இளைஞர் தண்ணீரில் இறந்து கிடந்தார். அப்போது யாரும் புகார் அளிக்க முன்வராததால், போலீசார் அதை ஒரு சாதாரண மரணமாகப் பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர்.
இதையடுத்து பின்னர், 1989 ஆம் ஆண்டு வெள்ளாயில் கடற்கரையில் மற்றொரு நபரைக் கொன்றதாகவும் முகமது அலி ஒப்புக்கொண்டார். அந்த நேரத்தில் அங்கு அடையாளம் தெரியாத ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதும் ஆதாரங்கள் இல்லாததால், அந்த வழக்கும் அப்போது மூடப்பட்டதும் கண்டறியப்பட்டது. இந்த இரண்டு வழக்குகள் தொடர்பான பழைய கோப்புகளை போலீசார் தற்போது ஆராய்ந்து வருகின்றனர்.
கேரளாவின் கொய்கோட்டைச் சேர்ந்த முகமது அலி 40 வருடங்களுக்கு முன் செய்த 2 கொலைகளை ஒப்புக்கொண்டு மலப்புரம் மாவட்டத்தில் உள்ள வெங்கரா காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்மையில் விபத்து ஒன்றில் அவரது மூத்த மகன் இறந்த நிலையில் அவரது இளைய மகன் பலத்த காயமடைந்தார். மேலும் குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்துள்ளன.இதன் காரணமாகவும் தொடர் குற்றவுணர்வின் காரணமாக அவர் காவல்துறையை அணுகி உண்மையைச் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
A person who surrendered after committing murder 40 years later