மது போதையில் அரசு பள்ளியை சேதப்படுத்திய மர்ம நபர்..போலீசார் வலைவீச்சு!  - Seithipunal
Seithipunal


வடலிவிளை அரசு பள்ளியில் மது போதையில் மின்சாதனம்   உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்டகோட்டாரை அடுத்த வடலிவிளையில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.தற்போது கோடை விடுமுறை என்பதால் பள்ளியில் மாலை 4.30 மணிக்கு தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் பள்ளியை மூடிவிட்டு  சென்றுள்ளனர்.

இந்நிலையில் பள்ளிக்குள்   நள்ளிரவு புகுந்த மர்ம  நபர்கள் கீழ் தளத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அறை முதல் ஒவ்வொரு வகுப்பறை கதவுகளையும் திறக்க முயற்சி செய்து உள்ளனர். ஆனால் திறக்க முடியாத விரக்தியில் மேல் மாடிக்கு சென்று ஒரு வகுப்பறை கதவின் பூட்டை உடைத்து கையில் கொண்டு வந்திருந்த மதுவை வகுப்பறையில் வைத்து குடித்துவிட்டு மது பாட்டிலை அங்கேயே போட்டு உடைத்து விட்டு  மின்விசிறி, டியூப் லைட், பிளாஸ்டிக் பக்கெட், தண்ணீர் குழாய்கள், கழிப்பறை மற்றும் பூந் தொட்டிகளை அடித்து உடைத்துள்ளனர்.

 சம்பவம் குறித்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எப்ரின், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை அழகம்மாள்  ஆகியோர் கோட்டார் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து பார்வையிட்டு பள்ளியின் அருகே வசிக்கும் பொதுமக்களிடம்  விசாரணை நடத்தி அப்பகுதி சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி  வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A mystery involving the damage to a government school under the influence of alcohol police are investigating


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->