இலவச அம்மா மிக்ஸியுடன் நின்ற தனியார் வாகனம்: வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை..!
Private vehicle parked with a free Amma mixer Revenue department officials are investigating
தென்காசியில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச அம்மா மிக்சியுடன் தனியார் வாகனம் ஒன்று நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி சுரண்டையைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் சுரண்டை பொட்டல் மாடசாமி கோவில் அருகில் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச மிக்சியுடன் தனியார் வாகனம் ஒன்று நிற்பதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பி இருந்தார். குறித்த புகார் மனு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. இதைத் தொடர்ந்து கோவில் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த தனியார் வாகனத்தை சுரண்டை போலீசார் காவல்நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

விசாரணையில் வீ.கே.புதூர் தாசில்தார் சுடலைமணி உத்தரவின் பேரில் சுரண்டை சிவகுருநாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் முதல் கட்ட விசாரணையை நடத்தினார். குறித்த விசாரணையில் கன்னியாகுமரி சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் ஏலம் விடப்பட்டு தென்காசிக்கு 361 மிக்ஸி கொண்டு செல்லப்படுவதாக டிரைவர் சந்தோஷ் கூறியுள்ளார். அத்துடன், இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
English Summary
Private vehicle parked with a free Amma mixer Revenue department officials are investigating