மாற்றுத்திறனாளிகளுக்கான விடியல் பயணத்திட்டம்..அரசு கொறடா துவக்கி வைத்தார்.! - Seithipunal
Seithipunal


உதகை மத்திய பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விடியல் பயணத்திட்டத்தினை அரசு கொறடா கா.ராமச்சந்திரன்கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம், உதகை மத்திய பேருந்து நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கோவை) லிட் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான விடியல் பயணத்திட்டத்தினை. அரசு தலைமைக்கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள்  கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அரசுதலைமைக்கொறடா அவர்கள்செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களையும்,பெண்களின் பொருளாதாரம் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு தனித்துவமான திட்டங்களையும் அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், பெண்களுக்காக விடியல் பயணம் என்றவொரு திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து பெண்கள் இலவச பேருந்து பயணத்தினை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கும் இதுபோன்று இலவசபேருந்து பயணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா மகளிர் விடியல் பயணத்திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கம் விரிவுபடுத்தும் நோக்கில் மாற்றுத்திறனாளிகள் அவர்தம் உதவியாளர்கள் ஆகியோருக்கு 4ல் 1 பங்கு சலுகை கட்டணத்தில் பயணம் செய்வது மாற்றியமைக்கப்பட்டு மலைப்பகுதி புறநகர் மகளிர் விடியல் பயண பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய அரசாணை பிறப்பிக்கப்பட்டு, இன்றைய தினம் இத்திட்டமானது மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

ஏற்கனவே இத்திட்டத்தின் மூலம் 05.07.2021 முதல் 11 நகரப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் உதவியாளர்கள் 91,394 நபர்களும், திருநங்கைகள் 1.924 நபர்களும், 1,29,72,434 மகளிர்களும் என மொத்தம் 1,30,65,752 நபர்களும், 25.02.2024 முதல் 99 மலைப்பகுதி பேருந்துகளில் மகளிர் 1,88,50,350 நபர்களும் என மொத்தம் 3,19,16,102 நபர்கள் பயனடைந்துள்ளனர். விடியல் பயண திட்டமானது மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு அற்புதமான திட்டமாகும். எனவே மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அரசு தலைமைக்கொறடா அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், உதகை நகர்மன்ற தலைவர் வாணீஸ்வரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கோவை) லிட் பொது மேலாளர் ஜெகதீசன், உதகை நகர்மன்ற துணை தலைவர் ரவிக்குமார், திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A morning travel program for the differently abled The government has officially launched it


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->