கட்டுக்கடங்காத கூட்டம்...5 கி.மீ. தூரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!
A massive gatheringDevotees waiting for 5 km to have darshan
திருப்பதியில் நேற்று 80,193 பேர் தரிசனம் செய்தனர். 33, 298 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4.43 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரத்துக்குமேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பல்வேறு மாநிலம் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இங்கு மாதந்தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று கருட சேவையானது நடைபெறும் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள்.
இந்தநிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார இறுதி விடுமுறை நாள் என்பதால் நேற்று முன்தினம் காலை முதலே ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.இதனால் தரிசனத்திற்கு அனுப்பும் அனைத்து அறைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருப்பதி மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் அதிக அளவில் காணப்பட்டனர்.
பக்தர்கள் ஆக்டோபஸ் வரை வரிசையில் காத்திருந்தனர். இதனால் தரிசனத்திற்கு 16 மணி நேரம் ஆனது. நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பாபவிநாசம் சாலையில் உள்ள சீலா தோரணம் வகை சுமார் 5 கிலோ மீட்டர் வரை வரிசையில் காத்திருந்தனர்.
இன்று காலையில் ஓரளவு கூட்டம் குறைந்தது. பக்தர்களுக்கு தங்கும் அறைகள் கிடைக்காததால், மறுநாள் அறைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அறை வழங்கும் மையங்கள் அருகில் உணவு சாப்பிட்டு அங்கேயே தூங்கினர்.
English Summary
A massive gatheringDevotees waiting for 5 km to have darshan