அடிக்கடி தகராறு: ஆத்திரத்தில் கணவனை கொலை செய்த மனைவி: வீட்டுக்குள் 05 அடி குழி தோண்டி புதைத்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


கணவன் மனைவி இடையே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்ததால், கோபத்தில் கணவனை கொலை செய்து உடலை வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்து வைத்த தனக்கு தெரியாது என்று நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

அசாம் மாநிலத்தைச் சபியல் ரஹ்மான் என்பவரது மனைவி ரஹிமான கதுன். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. குறித்த தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 26-ஆம் தேதி இவர்களுக்கிடையில், கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. 

குடிபோதையில் இருந்த கணவன் இருந்துள்ளதால் சண்டை அதிகரித்துள்ளது. இதனால் கோபத்தில் நிதானத்தை இழந்த மனைவி, கணவனை அடித்து கொலை செய்துள்ளார்.பின்னர் தவறை உணர்ந்துள்ளார். இதனால் அவருக்கு  பயணம் தொற்றிக் கொண்டுள்ளது.

இதனால், வீட்டிற்குள்ளேயே 05 அடி பள்ளம் தோண்டி, உடலை புதைத்துள்ளார். அதன் பின்னர் ஏதும் தெரியாது போல் நடந்து கொண்டுள்ளார். அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்த நிலையில்,  அவரது கணவரை எங்கே கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது தனது கணவர் வேலைக்காக கேரளா சென்றுள்ளார் எனச் சொல்லி சமாளித்துள்ளார். 

பின்னர். தனக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனைக்கு செல்கிறேன் எனக் கூறிக்கொண்டு வீட்டில் இருந்து ரஹிமான கதுன். வெளியேறியுள்ளார். அதன் பின்னர் சபியால் ரஹ்மான் சோதரர், தனது அண்ணனை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, காவல் நிலையத்தில் கணவனை கொலை செய்து, புதைத்ததை ஒப்புக்கொண்டு ரஹிமா சரணடைந்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife in Assam digs 5 foot hole in house where husband was murdered


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->