ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளி.. மன உளைச்சலில் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா கூலி தொழிலாளியான இவருக்கு காரணமாக வேலை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் குடும்பத்தை நடத்த கஷ்டப்படுத்த வந்துள்ளார்.

மேலும் , அவரது மகனின் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மன உளைச்சலைத் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறை உடனடியாக தகவல் அளித்தனர் . விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு தோன்றினால் உங்களுக்கு ஆலோசனை தரவும், ஆறுதல் சொல்லவும் அழையுங்கள்.
104 
044 -2464000 (ஸ்னேகா ஃபௌண்டேஷன் ட்ரஸ்)
022-25521111 (ஐகால் ப்யசோசோசியல் ஹெல்ப்லைன்) (Mon – Sat, 8am–10pm) உங்கள் போன் நம்பர் கூட பதிவு செய்யப்படாது. உங்கள் பெயர், முகவரி எதுவும் சொல்ல தேவையில்லை. உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படாது. உங்கள் மனம்விட்டு பேசுங்கள்., தற்கொலை எண்ணத்தில் இருந்து மீண்டு வரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A man Committed Suicide In Coimbatore


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->