கூலி தொழிலாளிக்கு  மதுபாட்டில் குத்து.. பறையர் பேரவை பொதுச்செயலாளர் கைது! - Seithipunal
Seithipunal


குடிபோதையில் ஏழை கூலி தொழிலாளியை மதுபாட்டிலை உடைத்து கண்ணில் குத்திய தென்னிந்திய பறையர் பேரவை பொதுச்செயலாளர் சன்னாசியை போலீசார்  கைது செய்து விசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர்.

பெரியகுளம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவன் சன்னாசி, இவன் தென்னிந்திய பறையர் பேரவை என்ற அமைப்பை தொடங்கி. ஒபிஎஸ் க்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
இவன்பழம் விற்க்கும் தொழில் செய்வதோடு சட்டவிரோதமாக கட்டப்பஞ்சாயத்து - மிரட்டுதல் என குற்ற செயல்கள் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்,

இந்நிலையில் நேற்றுஇன்று இரவு சுமார் 11 மணியளவில் பெரியகுளம் வடுகபட்டி சாலைப் பகுதியில் சன்னாசி அவரது நண்பர்களோடு மது அருந்திவிட்டுரகளையில் ஈடுபட்டுவந்துள்ளார். அப்போது அந்த வழியில் வந்த பட்டாளம்மன் கோவில்தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான முருகன் மகன் விக்கி என்ற விக்கினேஷ் என்பவரை அழைத்து வம்பு செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்

அப்போது சன்னாசி  கையில் வைத்திருந்த மதுபாட்டிலை உடைத்து கொலை செய்யும் நோக்கத்துடன் விக்னேஷ்-ன் கண்ணில் குத்தியுள்ளான்இதில் கண்விழிக்குள் படுகாயம் ஏற்பட்டு கண்விழி முழுவதுமாக பாதிக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் விக்கிஅதே இடத்தில் விழுந்துள்ளார்,

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்,

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் விக்கியின் கண்பார்வை போய்விட்டதாகவும் அருவைசிகிச்சை செய்து உயிரை காப்பாற்ற உரிய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்,இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் நாடகமாடி படுத்து இருந்த சன்னாசியை தென்கரை காவல்துறையினர் இன்று அதிகாலை கைது செய்து விசாரணை மேற்க்கொண்டுவருகின்றனர்

சன்னாசி என்பவன் மீது தென்கரை காவல் நிலையத்தில் பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A laborer was stabbed in a liquor store The secretary of the Parayar Council has been arrested


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->