காரசாரமாக நடந்த விவாதம்! திமுக பேச்சாளர் செந்தில் வேல் கரூர் சம்பவம் விபத்து என்று ஒத்துக் கொண்டதால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் இன்னும் தமிழக அரசியல் சூழலை கலக்கி வருகிறது. இந்த சம்பவத்துக்கு நடிகர் விஜய் தான் பொறுப்பு என தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைத்து வரும் திமுகவுக்கு, தற்போது தங்களது பேச்சாளர் ஒருவரின் கருத்து பெரும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது.

திமுகவுக்காக பல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் வலுவாக பேசிவரும் தமிழ்கேள்வி செந்தில்வேல், இப்போது கரூர் சம்பவம் குறித்து அளித்த கருத்தால் பரபரப்பு நிலவுகிறது. சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் அவர், “இது ஒரு விபத்து தான்” என்று ஒப்புக்கொண்டது அரசியல் ரீதியாக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அந்த நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகர் காமேஷ், “கரூர் நிகழ்ச்சி நடந்த இடத்தில் அடிப்படை வசதிகளே இல்லை. கழிப்பறைகள் இல்லாத, ஆம்புலன்ஸ் போக முடியாத இடத்துக்கு அனுமதி வழங்கியதற்கு திமுக அரசு தான் காரணம்” என வாதித்தார். இதற்கு பதிலாக செந்தில்வேல், “இது ஒரு விபத்து. இதை அரசியலாக்க வேண்டாம்” என கூறியதோடு, விவாதத்தில் இருந்து நடுவில் எழுந்து விட்டு சென்றார்.

அவரை நிகழ்ச்சியில் தொடருமாறு தொகுப்பாளர் கேட்டபோதும், செந்தில்வேல் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனை அரசியல் விமர்சகர் காமேஷ், “இப்போது திமுக பேச்சாளர் தாமாகவே இது விபத்து என்று ஒப்புக்கொண்டார்” எனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் செந்தில்வேலின் இந்த நடத்தை, திமுக வட்டாரத்துக்குள்ளும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சம்பவத்தில் அரசு மீது குற்றச்சாட்டுகள் ஏற்கனவே சூடுபிடித்த நிலையில், திமுகவின் முக்கிய பேச்சாளர் இதை “விபத்து” என நேரடியாக ஒப்புக்கொண்டிருப்பது, எதிர்க்கட்சிகளுக்கு புதிய ஆயுதமாக மாறியுள்ளது.

இந்த விவாதத்திற்குப் பிறகு, சமூக வலைத்தளங்களிலும் செந்தில்வேலை குறித்த பல்வேறு கருத்துக்கள் மழையாக குவிந்து வருகின்றன. ஒருபுறம் சிலர் அவரது நேர்மையை பாராட்ட, மற்றுமொரு பக்கம், திமுக ஆதரவாளர்கள் அவரின் செயலால் கட்சியின் நிலை பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

கரூர் விபத்து அரசியல் சூழல் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், திமுக பேச்சாளர் செந்தில்வேல் வெளிப்படையாக சொன்ன இந்த ஒப்புதல், அடுத்த சில நாட்களில் புதிய அரசியல் விவாதங்களை தூண்டும் என்பது நிச்சயம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A heated debate DMK spokesperson Senthil Vel creates a stir as he admits that the Karur incident was an accident


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->