பெண் மருத்துவருக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை! - Seithipunal
Seithipunal


ஜமீன் பல்லாவரம், ரேடியல் சாலையில் பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு, வசித்து வரும் 27 வயதுடைய பெண் மருத்துவர், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில், இவர் செல்போனுக்கு கடந்த சில தினங்களாக வாட்ஸ்அப் மூலம், ஆபாச படம், குறுஞ்செய்திகள் தொடர்ச்சியாக வந்துள்ளன.

பெண் மருத்துவர், தனது கணவரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவரது கணவர், குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டு பேசியபோது, அப்போது அந்த நபர் ஆபாச படம், குறுஞ்செய்திகள் அனுப்பியதோடு மட்டுமல்லாமல் அவரது கணவரையும் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் சைபர் கிரைம் போலீசில் அவர்கள்  புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, கண்ணுதோப்பு தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார் (27) என்பவர், பெண் மருத்துவருடன் ஒன்றாக படித்து வந்ததும், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வருவதும், பெண் மருத்துவரின் செல்போனுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி, பாலியல் தொல்லைகள் செய்ததும் தெரியவந்தது.

இதன்பின் போலீசார், சுரேஷ்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A female doctor was sexually harassed by sending obscene pictures through WhatsApp


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->