மதுபோதையில் அட்டகாசம்.. தமிழக முதல்வரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் இல்லத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், நேற்று காவல் துறையினர் அவரின் இல்லத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

வெடிகுண்டு நிபுணர்கள் தமிழக முதல்வரின் இல்லத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டதில், வெடிகுண்டு தொடர்பான எந்த விதமான பொருட்களும் அங்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து பாதுகாப்பு கருதி காவல் துறையினர் அப்பகுதியில் முகாமிட்டனர். 

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக திருவண்ணாமலையை சார்ந்த அன்பழகன் என்பவரை சேலம் பூலாம்பட்டி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில், முதியவரான அன்பழகன் மது போதையில் காவல் துறையினரின் அவசர உதவி எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு முதல்வரின் இல்லத்தில் குண்டு வெடிக்கும் என்று கூறி அழைப்பை துண்டித்தது தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a Drunken Culprit Threatening Tamilandu CM Edappadi Palanisamy House Bomb Blast


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal