காதல் என்ற போர்வையில் உல்லாசம்.. அரசாங்க அதிகாரியின் காமுக கொடூரங்கள்.. காட்பாடியில் பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் பகுதியை சார்ந்த 25 வயது இளம்பெண், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் லெப் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார். இவருக்கு காட்பாடியை அடுத்துள்ள பள்ளிக்குப்பம் பகுதியை சார்ந்த மணிகண்டன் (வயது 27) என்ற நபர், கடந்த 2018 ஆம் வருடத்தில் அறிமுகமாகியுள்ளார். 

மணிகண்டன் வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவி தட்டச்சு அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் முதலில் நட்பாக பழகி வந்த நிலையில், இவர்களுக்குள் காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். 

இந்நிலையில், பெண்ணிடம் ஆசை வார்த்தையை கூறிய காமுகன், அவருடன் அவ்வப்போது உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளான். இதுமட்டுமல்லாது பெண்ணை சீரழித்தது போதாதென்று அவசர தேவை என்று கூறி மொத்தமாக ரூ.1 இலட்சத்து 17 ஆயிரத்தை பறித்துள்ளான்.

பின்னர் பெற்றோரிடம் சம்மதம் பெற்று விரைவில் திருமணம் செய்து கொள்ளவேண்டி பெண் தொடர்ந்து மணிகண்டனை வற்புறுத்தி வந்த நிலையில், தொடர்ந்து காமுகன் மணிகண்டன் காலம் தாழ்த்தி வந்துள்ளான். இதனால் சந்தேகம் அடைந்த பெண்மணி இது குறித்து விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக உள்ள மணிகண்டனை தேடி வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

a Drama Love Govt Officer Sexual abuse girl by Love Police Investigation at Vellore Katpadi


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->