விளையாட சென்ற இடத்தில சில்மிஷம்..உடற்கல்வி ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ!
A commotion occurred at the place where they went to play it seems an incident involving a physical education teacher has taken place
மாணவிகளை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச்சென்று சில்மிஷம் செய்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சொல்லப் போனால் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு ஆனது அளிக்கப்பட்டு வருகிறது .ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் சீண்டலில் ஈடுபடுத்துவது போன்ற குற்ற செயல்களும் நடந்தேறி வருகிறது .அது மட்டுமல்லாமல் பள்ளி மாணவிகளை காதலிப்பதாக கூறி மாணவர்கள் அவர்களுடன் ஊர் சுற்றி விட்டு அவர்களை ஏமாற்றி விடுவதும் நடந்து வருகிறது.
இந்தநிலையில் மாணவிகளை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச்சென்று சில்மிஷம் செய்த உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை பானாம்பட்டு பாதை பகுதியை சேர்ந்த ஆதி என்ற சிவபாலன் என்பவர் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உடற்கல்வி பாடவேளையின்போது 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலரை பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச்சென்று சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள், இதுகுறித்து தங்கள் பெற்றோரிடம் கூறி அழுதுள்ளனர்.
உடனடியாக இதுகுறித்து, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அரசு பள்ளி மாணவிகளிடம் உடற்கல்வி ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
A commotion occurred at the place where they went to play it seems an incident involving a physical education teacher has taken place