சேலம்! புறா பிடிக்க சென்ற கல்லூரி மாணவன் ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சேலத்தில் புறா பிடிக்க சென்ற கல்லூரி மாணவன் ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சேலம் ஆத்தூர் அருகே வடக்குகாடு பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார். வயது 19. இவர் ஆத்தூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்தார்.

மனோஜ் குமார் நேற்று தனது வீட்டிற்கு அருகே உள்ள விவசாய கிணற்றில் சுற்று சுவர் பகுதியில் உட்கார்ந்திருந்த புறாவை பிடிக்க சென்றுள்ளார். அப்போது கிணற்றின் படிக்கட்டுகள் வழியாக இறங்கி செல்லும்போது கால் இடரி கிணற்றின் உள்ளே தவறி விழுந்துள்ளார். மனோஜ் குமாருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு பணியினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A college student who went to catch a pigeon fell into a well and died in salem


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->