பலியான சாமி எருது.. கண்ணீர் மல்க பாரம்பரிய முறையில் அடக்கம் செய்த கிராம மக்கள்.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டம் குளித்தலையில் 35 ஆண்டுகளாக பொதுமக்களால் பராமரிக்கப்பட்டு வந்த சாலை எருது என்ற 'சாமி மாடு' உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பொதுமக்கள் ஒன்று கூடி அதனை அடக்கம் செய்திருக்கின்றனர்.

கரூர் மாவட்டம் சின்னையம்பாளையம்  ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலை எருது என அழைக்கப்படும் சாமி மாட்டை  அந்த ஊர் மக்கள் பராமரித்து வந்தனர். இந்த மாடு அவர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருந்தது.

இந்த மாடு பல போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றிருக்கிறது. இந்நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக அந்த மாடு மரணமடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் அந்த மாட்டிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பாரம்பரிய முறைப்படி அதனை அடக்கம் செய்தனர். உடல் நலக்குறைவால் சாமி மாடு மரணமடைந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a bull belongs to temple passed away in karur due to old age and health problems


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->