விதவையான இளம்பெண்ணிடம் பேச விடாமல் தடுத்த தாய்: சரிமாரியாக வெட்டி கொலைசெய்த கொத்தனார்..! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் பட்டினம்காத்தான் போக்குவரத்து நகர் பகுதியை சேர்ந்தவர் திவ்யா (21). இருளாண்டி மற்றும் கருப்பாயி (வயது 45). மகளாவார். கருப்பாயி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். திவ்யாவின் கணவர் பாண்டியராஜன் கடந்த 03 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட, தனது 02 குழந்தைகளுடன் தாய் கருப்பாயி வீட்டில் வசித்து வருகிறார். அங்கிருந்து ராமநாதபுரம் அருகே மீன் வலை பின்னும் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா ஏ.நெடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் கருப்பசாமி (23). கொத்தனாரான இவர் ராமநாதபுரம் பகுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அப்போது கருப்பசாமிக்கும், திவ்யாவிற்கும் இடையே கடந்த 02 ஆண்டுகளாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கருப்பசாமி அடிக்கடி திவ்யாவின் வீட்டிற்குசென்று வந்துள்ளார். இதனை திவ்யாவின் தாய் கருப்பாயி கண்டித்துள்ளார். இதனால் கருப்பசாமி, கருப்பாயிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன், திவ்யாவும் இனி வீட்டிற்கு வரக்கூடாது என்று கூறியுள்ளார். திவ்யா இவ்வாறு கூறியதற்கு கருப்பாயிதான் காரணம் என எண்ணிய கருப்பசாமி, அவர் மீது ஆத்திரம் அடைந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கருப்பசாமி, திவ்யாவின் வீட்டிற்கு சென்று கருப்பாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதோடு,அவரை தரதரவென இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் வீட்டில் வைத்திருந்த அரிவாளை எடுத்து கருப்பாயியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கருப்பாயி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நிலையில், அங்கிருந்து கருப்புசாமி தப்பி ஓடியுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திவ்யா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது தாயை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், கருப்பாயியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து திவ்யா ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்துள்ளார்.

இதனையடுத்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரேசுவரன், சப்-இன்ஸ்பெக்டர் தங்க ஈஸ்வரன் ஆகியோர் அங்கு சென்று விசாரணை செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கருப்பசாமியை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A bricklayer hacked his mother to death for preventing her from speaking to a young woman


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->