வீட்டில் பத்திரமாக சேர்ப்பதாக கூறி 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்... ஆட்டோ டிரைவர் கைது! - Seithipunal
Seithipunal


தம்பியுடன் பஸ் நிலையத்துக்குவந்த 16 வயது சிறுமி யை வீட்டில் பத்திரமாக விடுவதாக கூறி ஆட்டோ டிரைவர் நண்பருடன் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தாவணகெரே டவுன் பஸ் நிலையத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி, தனது தம்பியுடன் வந்து  அங்கு பஸ்சுக்காக காத்து நின்றனர் . அப்போது அங்கு வந்த இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த ஒரு ஆட்டோ டிரைவர், தான் வீட்டில் பத்திரமாக இறக்கி விடுவதாக கூறி சிறுமியை அழைத்ததையடுத்து சிறுமி, தனது தம்பியுடன் ஆட்டோவில் ஏறினார். சிறிது தூரம் சென்றதும், அந்த ஆட்டோவில் ஆட்டோ டிரைவரின்  நண்பர் ஏறியுள்ளார்.

பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு சென்று , ஆட்டோ டிரைவரும், அவரது நண்பரும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். மேலும் அவளது தம்பியையும் அவர்கள் சரமாரியாக  தாக்குதலில் நிலைகுலைந்த மயங்கினான். அதையடுத்து அவனை கொலை செய்துவிடுவதாக மிரட்டி, சிறுமியை ஆட்டோ டிரைவரும், அவரது நண்பரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பின்னர் அவர்கள் சிறுமியிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தம்பியை மீட்டுக் கொண்டு அங்கிருந்த சில வியாபாரிகளின் உதவியுடன் அவள் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தாள். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவரையும், அவரது நண்பரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A 16 year old girl was raped on the pretext of keeping her safe at home Auto driver arrested


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->