ரூ.95 ஆயிரம் மின் கட்டணம்.! கூலித் தொழிலாளி அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் ரூபாய் 95 ஆயிரம் மின் கட்டணம் வந்ததால் கூலி தொழிலாளி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் மல்குத்திபுரம் தொட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி ரேவண்ணா (40). இவரது வீட்டில் 40 முதல் 50 யூனிட் வரையே மின்சாரம் பயன்படுத்தி வந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதால் கடந்த சில ஆண்டுகளாக ரேவண்ணாவின் வீட்டிற்கு மின் கட்டணமே வராமல் இருந்துள்ளது.

ஆனால் நேற்று ரேவண்ணாவின் செல்போனுக்கு 94,985 ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவண்ணா, இதுகுறித்து தாளவாடி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

இதற்கு அதிகாரிகள் மின்கட்டணம் கணக்கீடு செய்யும்போது ஏதாவது குளறுபடி ஏற்பட்டிருக்கும் என்றும், இதனை சரி செய்து தருகிறோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட பிறகு தான் அதிர்ச்சி அடைந்த கூலி தொழிலாளி நிம்மதி அடைந்தார்.

மேலும் இந்த சம்பவம் அப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

95000 electricity bill for a laborer house in erode


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->